Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சொந்த தொகுதியில் நரேந்திர மோடி- பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

மோடி

வாரணாசிக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு இன்று (22-ம் தேதி) சென்றுள்ளார். நாளையும் அங்குதான் இருக்கிறார். பிரதமரின் இந்தப்பயணத்தில், உள்கட்டமைப்பு, ரயில்வே, ஜவுளி, நிதி உள்ளடக்கல், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம், கால்நடை, கலாசாரம் மற்றும் ஆன்மிகம் போன்ற பல்வேறு துறைகளின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். படா லால்பூரில் – கைவினைப் பொருள்கள் விற்பனைக்கு உதவும் மையமான – தீனதயாள் ஹஸ்த்காலா சன்குல்-ஐ பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சன்குல்லில் உள்ள வசதிகளை சிறிது நேரம் பார்வையிடுவார். காணொலி காட்சி மூலம் மஹாமானா விரைவுவண்டியை நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயில், வாரணாசியை குஜராத்தில் உள்ள சூரத் மற்றும் வதோதராவை இணைக்கும்.

அதே இடத்தில், பிரதமர், அடிக்கல் நாட்டுவதை குறிக்கும் கல்வெட்டை திறந்து வைக்கிறார். அப்போது பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அர்ப்பணிக்கிறார். உத்கார்ஷ் வங்கியின் வங்கிச் சேவைகளை பிரதமர் தொடக்கி வைக்க உள்ளதுடன், வங்கியின் தலைமையிட கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டியதைக் குறிக்கும் கல்வெட்டையும் திறந்து வைக்கிறார். உத்கார்ஷ் வங்கி, குறு-நிதியளித்தலில் சிறப்பு பெற்றது. மேலும், வாரணாசி மக்களின் சேவைக்காக, ஜல் அவசரகால ஊர்தி சேவையையும், ஜல் சவ வாகன சேவையையும் பிரதமர் காணொலி காட்சி மூலம் அர்ப்பணிக்க உள்ளார். இன்று (22-ம் தேதி) மாலை, பிரதமர், வாரணாசியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க துளசி மானஸ் கோயிலுக்குச் செல்கிறார். “ராமாயணம்” குறித்த அஞ்சல்தலையை அவர் வெளியிடுகிறார். அதன்பின்னர், நகரில் உள்ள துர்கா மாதா கோயிலுக்குச் செல்வார். செப்டம்பர் 23-ம் தேதி ஷாஹான்ஷாபூர் கிராமத்தில் சுகாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் சிறிது நேரம் பிரதமர் பங்கேற்கிறார். அதன் பின்னர், பசுதான் ஆரோக்கிய மேளாவுக்குச் செல்கிறார். பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டப் (ஊரகம் மற்றும் நகர்ப்புற) பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கிய பின், கூட்டத்தினரிடையே பிரதமர் உரையாற்றுகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close