Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தமிழக அரசு, மத்திய பா.ஜ.க., அரசுக்கு அடிபணியக் கூடாது' - ஜி.கே.வாசன்

Salem: 

சேலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் துரைசாமி -ஜானகி அம்மாள் சதாபிஷேக நிகழ்ச்சி, சேலம் ஐந்து ரோட்டில் உள்ள ரத்தினவேல் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வந்திருந்தார். அப்போது பத்திரிகையாளர் சந்திப்பில் வாசன் பேசியது.

''காவிரி மேலாண்மை பிரச்னையில் மத்திய அரசும், கர்நாடக அரசும் தமிழ் மக்களை தொடர்ந்து வஞ்சிக்கிறது. மனிதாபிமானம் அற்ற முறையில் நடந்துகொள்கிறது. இந்தப் பிரச்னையில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி. அரசு நடுநிலமையோடு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வர வேண்டும். உச்ச நீதிமன்றம் சொல்லியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பது தவறானது.

வெளிப்படையாக கர்நாடக முதல்வர் சித்தராமையா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விடமாட்டோம் என்று சொல்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மத்திய பி.ஜே.பி., அரசையும், கர்நாடக அரசையும் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தமிழக அரசு விவசாயிகள் பிரச்னை, நீட், நெடுங்குளம் போன்ற பிரச்னைகளில் மத்திய பா.ஜ.க., அரசுக்கு அடிபணிந்து போக வேண்டிய அவசியமில்லை. தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழல் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற கமலின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். த.மா.க-வின் கொள்கையும் அதுதான். நான் அனைவருக்கும் மரியாதை கொடுக்கக் கூடியவன். அவரும் அனைவருக்கும் மரியாதை கொடுக்கக் கூடியவர். ரஜினியை போலத்தான் கமலும்.

தமிழ்நாட்டில் மக்களாட்சி நடைபெறவில்லை. ஒவ்வொரு விஷயத்துக்கும் நீதிமன்றத்தையே நாட வேண்டி இருக்கிறது. இதனால், நீதிமன்றத்துக்கு வேலைப் பளு அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அரசியல் கட்சிகள் மீதும், அரசியல் மீதும் நம்பிக்கை இல்லாமல் போகிறார்கள். அ.தி.மு.க-வின் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்ததைப் பற்றி நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close