Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீனவர்களுக்கு ஜி.எஸ்.டி.வரி விலக்கு வேண்டும்; கலெக்டரிடம் கோரிக்கை

மத்திய அரசு  கொண்டுவந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியால், மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இயற்கைசீற்றங்கள், உயிர் இழப்புகள், பொருள்சேதம் போன்ற இழப்புகளைக் கருத்தில்கொண்டு ஜி.எஸ்.டி வரியிலிருந்து மீனவர்களின் வாழ்வாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு மத்திய அரசை வற்புறுத்தி, வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்திட,  நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மீனவர் குறைத்தீர்க்கும் கூட்டத்தில், குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் மீனவர்கள் மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மீனவர்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மீன்பிடித் தொழிலின் போது ஏற்படும் இயற்கைசீற்றங்கள், உயிர் இழப்புகள், பொருள்சேதம் போன்ற இழப்புகளைக் கருத்தில்கொண்டு, மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தும் வலை, கயறு மற்றும் மீன்பிடி உபகரணங்கள், மீன்கள், கருவாடுகள் அனைத்துக்கும் தமிழக அரசு வரிவிலக்கு அளித்துவந்தது.

ஆனால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியால் மீன், கருவாடு, உப்பு, வலை அகியவற்றுக்கு 5 சதவிகிதமும், படகு உபகரணங்களுக்கு 12 சதவிகிதமும், கனமான ஈயக்குண்டுகள், படகு இயந்திரங்கள், வலைநூல் அகியவற்றுக்கு 18 சதவிகிதமும்  மிதவைகள் போன்ற உபகரணங்களுக்கு 28 சதவிகிதமும் வரியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே, ஜி.எஸ்.டி வரியிலிருந்து மீன்பிடி வலை மற்றும் உபகரணங்கள், மீன், கருவாடு, உப்பு, வலை, நூல் போன்றவற்றுக்கு விலக்கு அளித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, தமிழக அரசு மத்திய அரசை வற்புறுத்தி ஜி.எஸ்.டி வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்திட, மீனவர் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சஜ்ஜன் சிங் சவான் துரித நடவடிக்கை எடுக்க மீனவர்கள் சார்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close