Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'போலீஸ்காரர்களா... இல்லை கந்துவட்டி கும்பலா?' - கொந்தளிக்கும் மக்கள்

வாகனச் சோதனையில் ஈடுபடும் போலீஸாரைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

                

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில், 'வாகனச் சோதனை என்ற பெயரில் போலீஸ்காரர்கள் இரவு, பகல் பார்க்காமல் பொதுமக்களைப் பிடித்து, கட்டாய வசூல்செய்துவருகிறார்கள்' என்ற குற்றசாட்டு வெகு நாட்களாக இருந்துவருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாகவே போலீஸ்காரர்கள் கீழப்பழுவூர் பிரிவுச் சாலையில் நின்றுகொண்டு விவசாயிகள், கிராம வாசிகள் கடைவீதிக்கு பொருள்கள் வாங்க வந்தால்,  அவர்களை மடக்கிப்பிடித்து, எங்கே உன் லைசன்ஸ்.. எங்கே உன் இன்ஸுரன்ஸ்? என்று கேட்கிறார்கள். இது இரண்டுமே வைத்திருக்கும் நபர்களிடம், ஏன் ஹெல்மெட் போடவில்லை என்று கேட்கிறார்கள். உன் மீது கேஸ் போட்டால், 5,000, 10,000 செலவாகும். எங்களை கவனிச்சிட்டு போனா உனக்கு எந்தப் பிரச்னையும் வராது. எப்புடி வசதி? என்று மிரட்டிப் பணம் வாங்குகிறார்கள். மாவட்டத் தலைநகரங்களில் பலர் லைசன்ஸ்,ஹெல்மெட் இல்லாமல் வண்டிகளில் செல்கிறார்கள்  அவர்களைப் பிடித்து கேட்காமல், குக்கிராமத்தில் நின்றுகொண்டு வாகனச்சோதனை என்ற பெயரில் கந்துவட்டி கும்பல் போல கட்டாய வசூல் செய்கிறார்கள் காவலர்கள். அவர்கள் போலீஸ்காரர்களா... இல்லை கந்துவட்டி கும்பலா?’ என்று  போலீஸாரை கண்டித்தும் திருச்சி – சிதம்பரம் சாலையில், மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம், 'இதுகுறித்து எஸ்.பி-யிடம் தகவல் தெரிவிக்கப்படும்' என கீழப்பழுவூர் போலீஸார் கூறியதையடுத்து, அனைவரும் கலைந்துசென்றனர். இதனால், அந்தச் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close