Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கண்மாய்க் கரைகளைப் பலப்படுத்த லட்சம் பனை மர விதைகள் நடும் பணி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய கண்மாய்களின் கரைகளைப் பலப்படுத்தும் வகையில், ஒரு லட்சம் பனை மர விதைகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கிவைத்தார்.

கண்மாய்கள், ஊரணிகளின் கரைகளைப் பலப்படுத்தும் விதமாக, அதன் கரைகளில் பனை மர விதைகளை நட்டுவைத்து இயற்கை அரணாகப் பாதுகாத்திடும் பழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டிருந்தனர். அதைப் பின்பற்றி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளின் கரைகளைப்  பாதுகாக்கும் வகையில், பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதார அமைப்பின் சார்பில், நீர் நிலைகளின் கரைகளில் பனை மர விதைகளை நடும் பணி  இன்று துவக்கப்பட்டது. பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதார அமைப்பின்  கட்டுப்பாட்டில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 640 கண்மாய்கள் உள்ளன. இவற்றின் கரைகளைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் வகையில் சுமார் 1 லட்சம் பனை மர விதைகள் நட இருக்கின்றன.

பனை மர விதைகளை நடும் மாவட்ட ஆட்சியர்


முதல் கட்டமாக, மாவட்டத்தில் உள்ள 33 கண்மாய்கள் தேர்வுசெய்யப்பட்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டப் பணியாளர்கள் மற்றும் அப்பகுதிகளில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களைக்கொண்டு, 10 ஆயிரம் பனை மர விதைகள் நடப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளின் கரைகளிலும் படிப்படியாக நடப்படும்.

இன்று, ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கரைப் பகுதியில் பனை மர விதைகள் நடும் பணியை, மாவட்ட ஆட்சியர் நடராஜன் துவக்கிவைத்தார். மாவட்ட ஆட்சியருடன் பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) செயற்பொறியாளர் வெங்கிடகிருஷ்ணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜா, வேளாண்மைப் பொறியியல்துறை செயற்பொறியாளர் தாமஸ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close