Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஓசூர் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்' - எடப்பாடி பழனிசாமி

ஓசூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி


மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின், நூற்றாண்டு விழா அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மாலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசுகையில், "பிரச்னைகளை எழுப்பி ஆதாயம் தேட நினைக்கும் தி.மு.க-வின் முயற்சி ஒருபோதும் பலிக்காது. இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. கிருஷ்ணகிரியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, அரசம்பட்டி உள்ளிட்ட 2 இடங்களில் தடுப்பணை கட்டப்படும். கிருஷ்ணகிரி நகராட்சி, சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

அதேபோல ஓசூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்படும். தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close