Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேராசிரியர் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பான  இறுதி அறிக்கை தாக்கல் செய்ய  நீதிமன்றம்  உத்தரவு !

 

காமராஜர் பல்கலைகழகம்

முன்னாள் மதுரை  காமராசர் பல்கலைக்கழகம் துணை வேந்தர் கல்யாணி மதிவாணன்,  தற்போதைய துணை வேந்தர் செல்லத்துரை ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் "

பல்கலை கழக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்,  பணியாளர்கள் சங்கத்தின் தலைவராக உள்ள பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கடந்த மே மாதம் 2014 ஆண்டு  தாக்கப்பட்ட வழக்கில் எங்கள் மீது நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இதோபோல் பேராசிரியர் சீனிவாசன் தன்னை தாக்கியவர்கள் மீது பதிவு செய்யபட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.  விசாரணைக்கு  மாற்ற வேண்டும் என மனு செய்திருந்தார். இந்த இரு மனுக்களும் நீதிபதி பாரதிதாசன், முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்ற உத்தரவுபடி  டி.எஸ்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். விரைந்து விசாரித்து முடிக்க கால அவகாசம் தேவைப்படுகிறது என கோரினார். இதை கேட்ட நீதிபதி, "இந்த வழக்கு விசாரணையை  முடித்து  இறுதி அறிக்கையை நவம்பர் 10 -ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்” என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை நவம்பர் மாதம் 13 -ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close