Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்கும் நம்பர் உங்களுக்கு தெரியுமா?

வாகன ஓட்டிகள் தங்களது  ஒரிஜினல் லைசன்சை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவால் சமூக வலைதளங்களில் காரசார விவாதங்கள் நடைப்பெற்றது. மீம்ஸ்களும் தட்டிவிடப்பட்டது. இவ்வாறு போக்குவரத்துறையில் புதிய திட்டங்கள் அமல்படுத்திவரும் நிலையில் போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக புகார் அளிக்க பொதுவான எண் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதையில் வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட சாலை விதிகளை மீறுவோர்களுக்கு அதிபட்ச அபராதம் விதித்து ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள், காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தலைமைச் செயலருக்கு உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன்அமர்வு முன்பாக கடந்த வாரம்  விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக காவல்துறை தலைவர் தரப்பில், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த புகார் அளிப்பதற்காக 9498181457 எனும் எண் புதிதாக உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இதனை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் பரப்புகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close