Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம் அதிகரித்துள்ளது!’ - தீபா

’ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படத்தை வெளியிடுவோம் என தற்போது கூறுபவர்கள் இத்தனை நாளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்’ என்று தீபா கேள்வியெழுப்பியுள்ளார்.

deepa
 

’ஜெயலலிதாவை பார்த்துப் பேசியதாகப் பொய் சொன்னோம்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓப்பனாகப் பேசியுள்ளது அ.தி.மு.க-வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ’சசிகலா சம்மதித்தால் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற புகைப்படங்களை வெளியிட தயார்’ என்று தினகரன் தெரிவித்தார். 

இந்நிலையில், இன்று சென்னை போயஸ் கார்டனில் சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா அண்ணன் மகள்  தீபா ’அ.தி.மு.க-வின் 1.5 கோடி தொண்டர்கள் என் பின்னால் உள்ளனர். ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகம் தற்போது அதிகரித்துள்ளது. ஜெ., சிகிச்சை பெற்ற படங்களை வெளியிட்டாலும் வெளியிடாவிட்டாலும் நாங்கள் வழக்கு தொடர்வது உறுதி. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படத்தை வெளியிடுவோம் என தற்போது கூறுபவர்கள் இத்தனை நாளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்’  என்று குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close