Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரி- கேரள எல்லையில் தொடரும் கடத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தின் வழியாக கேரளாவுக்கு அடிக்கடி உணவு பொருள்களுக்கு ,போதை பொருள்களும் கடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு நேற்று அதிகாலை புறப்பட்டு சென்ற அரசு பஸ்லில், அமரவிளை சோதனை சாவடியில் போலீஸார் சோதனை நடத்தினார்கள். அப்போது பஸ்ஸின் சீட்டுக்கு அடியில்  ஒரு பேக் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த சீட்டுக்கு அடியில் அமர்ந்திருந்தவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். பின்னர் போலீஸார்  விசாரணை செய்ததில் அவருடைய பேக்தான் என்று தெரிய வந்தது. இதையடுத்து, அவரை சோதனை சாவடிக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சுகுணன் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் நாகர்கோவிலில் இருந்து கஞ்சா வாங்கி சென்றதாக  போலீஸாரிடம்  தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சுகுணனை கைது செய்து போலீஸார் அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், யாரிடம் இருந்து சுகுணன் கஞ்சா வாங்கினார், இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைக்கிறது என்று போலீஸார் ரகசியமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நாகர்கோவில் திருவனந்தபுரம் இடையே ஓடும் ரயிலிலும் கடத்தல் சம்பவங்கள் நடந்துவருகிறது. அதனை தடுக்க ரயில்வே போலீஸாரும் கலால் துறையினரும் அடிக்கடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். குமரி கேரள எல்லை பகுதியான பாறைசாலை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து வந்த நாகர்கோவில் கோட்டயம் ரயிலில் சோதனை செய்ததில், சந்தேப்படும்படி இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்களிடம் ரூபாய் 2.15 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கம் மற்றும் 30 கிராம்  வைரகற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நகைகளுக்கான உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததை  தொடர்ந்து நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.அவர்களை தொடர்ந்து விசாரணை செய்த போது, ஒருவர் நாகர்கோவிலை சேர்ந்த வேலு என்பதும் இன்னொருவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த மகேஷ் என்பதும் தெரியவந்தது. ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் வணிகவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் நகைகளை எங்கிருந்து கொண்டு வந்தார்கள். பறிமுதல் செய்யப்பட்டது கடத்தல் நகைகளா என வணிக வரிதுறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close