Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரூரில் முடிவுக்கு வந்த ரெய்டு! மலைக்க வைக்கும் ஆதாரங்கள்!.

கரூரில் நான்காம் நாளாக செந்தில்பாலாஜி உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், கம்பெனிகளில் நடந்த வந்த வருமானவரித்துறை ரெய்டு இன்று மதியத்தோடு முடிவுக்கு வந்திருக்கிறது. மலைக்க வைக்கும் சொத்துகளையும், பணத்தையும் கணக்கில் வராமல் பினாமி பெயர்களில் செந்தில்பாலாஜி வாங்கி போட்டிருப்பது இந்த ரெய்டில் அம்பலமாகி இருப்பதாக வருமான வரித்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.


 


டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் ஆக்டிவாக இருந்தவர் கரூர் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி. கர்நாடகா குடகு ரிசார்ட்ஸில் தங்கி இருக்கும் அவரை கைது செய்ய, ஏற்கெனவே அவர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத்துறையில் பணி நியமன ஆணை தருவதாக சொல்லி வாங்கி நாலரை கோடி மோசடி வழக்கு காத்திருக்கிறது. அந்த வழக்கின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால்தான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அதோடு, அப்படி அந்த வழக்கில் கைது செய்யப்பட்டால், கூடவே செந்தில்பாலாஜி மீது குண்டாஸ் போடப்படலாம் என்கிற ரீதியில் அதிரிபுதிரி தகவல் பரவிக் கிடக்கிறது.


 

அந்த பயத்தில் இருக்கும் செந்தில்பாலாஜியை மேலும் கிலிப்படுத்தும் விதமாக கரூரில் கடந்த நான்கு நாள்களாக அவரின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், கம்பெனிகளில் ரெய்டு நடக்க ,அரண்டு கிடக்கிறார் அவர். கோவை வருமானவர்ரித்துறை கூடுதல் இயக்குநர் செந்தில்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகளால் 8 அணிகளாக பிரிந்து, மொத்தம் தியாகராஜன், சாமிநாதன், நவ்ரங்க் சுப்ரமணியன், அரசு ஒப்பந்தகாரர் சங்கர், செந்தில்பாலாஜியின் நண்பர் தாரணி சரவணன் உள்ளிட்ட 9 நபர்களுக்கு சொந்தமான 13-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று மதியம் வரை மொத்தம் நான்கு நாள்கள் ரெய்டு மேற்கொண்டனர்.

பத்திரிகையாளர்களிடம் நான்கு நாள்களும் எவ்வித தகவல்களையும் வெளியிட்டுவிடாமல் மௌனம் காத்தனர் அதிகாரிகள். அதோடு, எங்கே ரெய்டு நடத்துகிறார்கள் என்று தெரியாத அளவுக்கு மீடியாவை குழப்பினர். ஒருவழியாக இன்று மதியத்தோடு ரெய்டு முடிவுக்கு வந்தது. இந்த ரெய்டில்,70 கோடிக்கும் அதிகமான சொத்துகளை இந்த 9 பேர்களில் பலரை பினாமியாக வைத்து, செந்தில்பாலாஜி வாங்கி இருப்பது தெரிய வந்திருப்பதாக வருமான வரித்துறை வட்டாரம் கிசுகிசுக்கிறது. அதோடு, பத்து கோடி வரை முப்பது அக்கவுன்ட்களில் பிரித்து பிரித்து போடப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறதாம். அந்த அக்கவுன்ட்களை அதிகாரிகள் முடக்கி இருக்கிறார்கள்.

அதோடு, கரூர் லைட்ஹவுஸ் பகுதியில் உள்ள தாரணி சரவணனுக்கு சொந்தமான நிதி நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்கின்றனர். அதேபோல், 1.20 கோடி ரூபாய் ரொக்கமும் கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது. 'இதை எல்லாம் காரணம் காட்டி, செந்தில்பாலாஜி மீது அடுத்தடுத்து என்று பத்து வழக்குகளுக்கு மேல் பாய்ச்சி அவரை குண்டாஸில் அடைப்பதுதான் இந்த ரெய்டை ஏற்பாடு செய்தவர்களின் நோக்கம்' என்கிறார்கள் இந்த ரெய்டை AtoZ கண் அசைவில் வைத்திருந்த சிலர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close