Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹெச். ராஜா பிறந்தநாள் கொண்டாட்டம்...   ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஸ்டாலின், கேப்டன் பங்கேற்பு !

ஹெச்.ராஜா

 

பா.ஜ.க.வின்  தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பிறந்தநாள், வருகிற 27-ம்தேதி பிரமாண்ட விழாவாக  சென்னையில்  கொண்டாடப்படவுள்ளது. ஹெச். ராஜாவுக்கு இது மணிவிழாவும் கூட...  'விழா எப்படி இருக்கும் ?' விழாக்குழுவினரிடம் கேட்ட போது, " நூறாண்டு காலம் வாழ்கவென ராஜாவை வாழ்த்தும் 60 கவிஞர்களின் வாழ்த்துப்பா,  60 இளைஞர்களுக்கு கல்வி உதவி, 60 முதியோருக்கு வேட்டி- சேலைகள்  இப்படி அறுபது, அறுபதாக வாழ்த்துக்கான வேலைகள்  ராக்கெட் வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அறுசுவை விருந்தும் உண்டு, ஆனால் சைவம் மட்டுமே. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அன்று முழுவதும் விழாவில்தான் இருப்பார்கள். இதுபோல ஒரு அரசியல் தலைவரின் பிறந்தநாள்  விழாவை இனி, யாரும் பார்க்கப் போவது இல்லை" என்றனர்.

 ஹெச்.ராஜாவிடம் பேசினேன். "சென்னை கோவிலம்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் விழா நடக்கிறது. பிரமாண்டவிழா என்றெல்லாம் இல்லை. மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், கேப்டன், ஜெகத்ரட்சகன் என்று விழாவுக்கு வரும்படி  முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு கொடுத்திருக்கிறோம். வருவதாக உறுதி கொடுத்திருக்கிறார்கள். தமிழக, பிறமாநில மந்திரிகள் இதில் பங்கேற்கிறார்கள்" என்றார்.என்னோடு  'நீட்' தேர்வெழுத வருகிறீர்களா என்று மு.க.ஸ்டாலினை வறுத்தெடுத்த தமிழிசை, இந்த விழாவின் வரவேற்புக் குழுவில் இருக்கிறாராம்... அரசியல் காழ்ப்புகளைக் கடந்து பயணிக்கிற தருணங்களாக இது போன்ற நட்பு விழாக்கள் அமைந்து விடுகிறது.

 இயக்குநர் கௌதமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் சிறைக்குச் செல்ல வாய்ப்புள்ளது, அந்த செய்தியாளர் ஒரு தேசத்துரோகி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒரு கொலைகாரர், நடிகர்கள் கமலஹாசன், சத்யராஜ் போன்றோர் தமிழ் மக்கள் மீது கொண்ட அன்பும் பற்றும் மேலோட்டமானதுதான்,  டி.டி.வி.தினகரனுக்கு  அடுத்து சிறைக்குப் போகப் போவது அ.தி.மு.க. மந்திரிகள்தான், நெடுவாசல் போராட்டத்தை பயங்கரவாத இயக்கங்கள் தூண்டி விடுகின்றன... 
என்று தொடங்கி மு.க.ஸ்டாலின் வரை ஹெச்.ராஜா, போட்டுத்தாக்கிய சமீபத்திய ஸ்டேட்மெண்டுகள் பகீர் ரகம்.  ஹெச். ராஜாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று வாழ்த்த அரசியல் தலைவர்கள் வருவதாக ஒப்புக் கொண்டதே, அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைவரிடமும் நட்பாக இருந்து வருவதற்கு சாட்சியாக இருக்கிறது ... 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close