Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராமநாதபுரத்தில் தந்தை பெரியார் பிறந்த தின கருத்தரங்கம்!

த.மு.எ.க.ச சார்பில் பெரியார் நினைவு கருத்தரங்கம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இதில் பத்திகையாளர், ஓவியர் ஶ்ரீரசா கலந்து கொண்டு உரையாற்றினார்.


ராமநாதபுரம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், தந்தை பெரியாரின் 139-வது பிறந்த தின கருத்தரங்கம் மாவட்ட தலைவர் ஜான்செளந்தரராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் டாக்டர் வான் தமிழ் இளம்பரிதி பொருளாளர் அசரப் அலி, மாவட்ட நிர்வாகிகள் அழகுடையான், காந்தி, பொன்முத்து, ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தந்தை பெரியார் பிறந்த தின கருத்தரங்கம்

இக்கருத்தரங்கில் பங்கேற்ற த.மு.எ.க.ச மாநில செயற்குழு உறுப்பினர்  ஓவியர் ஶ்ரீரசா ''நீட் தேர்வினால் நிகழ்ந்த மாணவி அனிதாவின் மரணம், முற்போக்கு எழுத்தாளர்கள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே,  கல்புர்க்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரின்  படுகொலை போன்ற அனைத்தும் பொருளாதார சுரண்டல்களை அடிப்படையாக கொண்டே நடக்கிறது. போட்டி நிறைந்த உலகில் நிறுவனங்களுக்காகவே நம் குழந்தைகளை தயார் செய்கிறோம். உலக மயமாதலின் பின்னணியின் வழியாகத்தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. இதற்கு ஏதுவாக இந்திய ஒன்றியங்களின் அதிகாரங்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக மைய அரசுக்கு மாற்றும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 42 ஆண்டுகளுக்கு முன் கல்வியை மத்திய பட்டியலுக்கு சத்தமில்லாமல் மாற்றியதன் விளைவினைதான் இன்று நாம் அனுபவிக்கிறோம். திராவிட ஆரிய யுத்தத்தினை தாண்டி இன்று சர்வதேச தாக்குதல்கள் நம் மீது நடத்தப்படுகின்றன. இந்த சூழலில் எதிர்கால தலைமுறையினருக்கு யுத்தகளமே காத்திருக்கிறது" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close