Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’நன்றி மறந்து பேசுகிறார் கமல்’’ – அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘’நடிகர் கமல், நன்றி மறந்தும் பொறுப்பில்லாமலும் பேசுகிறார்’’ எனக் குற்றம் சாட்டியுள்ளார். 

minister kadamboor raju speech

பொதுக்கூட்ட மேடையில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘’கட்சியில் அண்ணா பெயரையும் கொடியில் அவரோட உருவத்தையும் பொறிக்கப்பட்டதனால அண்ணா பிறந்தநாளைக் கொண்டாடுற தகுதி, தரம், தன்மை அ.தி.மு.க.வு-க்கு மட்டும்தான் உண்டு. தி.மு.க-வுக்கு துளியும் கிடையாது. இந்த ஆட்சியை, ஏதாவது காரணம்காட்டி கலைத்துவிட்டு, எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று மு.க.ஸ்டாலின் பகல்கனவு காண்கிறார். பகல்கனவு என்றைக்கும் நடந்ததாக சரித்திரம் இல்லை. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லுங்கள்னு மு.க.ஸ்டாலின் தினமும் பேசுகிறார்.

ஆளுநர் உத்தரவிட்டு பெரும்பான்மையை நிரூபிக்கச் சொன்னாலும், நாங்கதான் ஜெயிப்போம். சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களில், இந்த மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ., சுந்தரராஜனும், விளாத்திகுளம் தொகுதி எம்.எல்.ஏ., உமா மகேஷ்வரியும் உண்டு. ’’சேராத பசங்ககூட சேர்ந்து கெட்டுப்போயிடக் கூடாது’’னு அம்மா, தன் குழந்தைக்கு புத்திமதி சொல்லுற மாதிரி சொன்னோம். ஆனா, அவங்க ரெண்டுபேரும் எங்க பேச்சைக் கேட்காம தினகரன் பக்கம் சேர்ந்து இப்போ தகுதிநீக்கமாகி, தனி மரமாயிட்டாங்க. இவங்க நீதிமன்றத்துக்குப் போனாலும் ஒன்னும் நடக்காது. எம்.எல்.ஏ-க்கள் மேல நடவடிக்கை எடுக்கவும் விசாரணை செய்யவும் சபாநாயகருக்குத்தான் முழு அதிகாரம் உண்டு. நீதிமன்றத்துக்கு இல்லை. வரும் அக்டோபர் மாதத்தில், இரட்டை இலையை மீட்போம்' என்று தெரிவித்தார்.

audience

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’'விஸ்வரூபம்' படம் ரிலீஸாவதில் சிக்கல் இருந்தபோது, நாட்டை விட்டு வெளியேறப் போறேன்னு விரக்தியில் பேசிய நடிகர் கமலஹாசன் மீது இரக்கப்பட்டு, அந்தப் படத்தின்மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுத்தவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான். அந்த நன்றியை மறந்துட்டு இப்போது பேசுறார். அவருக்கு பொறுப்பு ஏதும் இல்லை. அதனால, அவர் பேசுற எதையும் பெருசா எடுத்துக்கவேண்டிய அவசியமில்லை. கமல் – கெஜ்ரிவால் சந்திப்பால், எந்தத் தாக்கமும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. கமல் அரசியலுக்கு வர்றேன் வரப்போறேன்னு சொல்றார், வந்துதான் பார்க்கட்டுமே. அவர் அரசியலுக்கு வந்தாலும் ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை.’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close