Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லியில் கடன் அட்டைகளைக் காட்டி விவசாயிகள் நூதன போராட்டம்

டெல்லியில் 71-ம் நாளாகப் போராடிவரும் தமிழக விவசாயிகள், தங்களது கழுத்தில் கடன் அட்டைகளை அணிந்துகொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள், டெல்லி ஜந்தர் மந்தரில், கடந்த 71-வது நாளாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளின் கஷ்டங்களைத் தெரிவிக்கும் வகையில், நூதனமான போராட்டங்களை நடத்திவந்தனர். இதையடுத்து, விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன் விவரங்களும் நிலம் உள்ளிட்ட விவரங்கள் அட்டைகளில் எழுதப்பட்டிருந்தன. மேலும், தங்கள் வங்கிக் கணக்கில் தலா ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துபவர்கள் விவசாயிகள் அல்ல எனச் சிலர் விமர்சனம் செய்ததாகவும், அவர்களுக்குத் நாங்கள் விவசாயிகள்தான் என்பதைத் தெரியப்படுத்தவே, கழுத்தில் அட்டைகளைத் தொங்க விட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close