Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முல்லைப் பெரியார் அணையைத் திறந்துவைத்து பன்னீர்செல்வம் வாக்குறுதி!

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டுப் பகுதிகளில், முதல் போக சாகுபடிக்கு முல்லைப் பெரியார் அணையி லிருந்து இன்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் தண்ணீர் திறக்கப்பட்டது.

paneerselvam
 

சுமார் 14ஆயிரத்து 707ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு, 200 கன அடி தண்ணீர் வீதமும், தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு, சுமார் 100 கன அடி தண்ணீர் வீதமும் என மொத்தமாக 300கன அடி தண்ணீர் தினமும் திறக்கப்படும்.

இன்று முதல், 120 நாள்களுக்கு தண்ணீர் இறுப்பைப் பொருத்தும், தண்ணீர் தேவையைக் கருத்தில்கொண்டும் தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில், தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தேனி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், கம்பம் தொகுதி எம்.எல்.ஏ., ஜக்கையன், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்கத் தலைவர் தர்விஸ்மைதீன் மற்றும் துணைத் தலைவர் ஓ.ஆர்.நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

paneerselvam
 

அணை சட்டர் திறக்கப்பட்டதும், தண்ணீரை மலர்தூவி வரவேற்றார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். இன்றைய கணக்கீட்டின்படி முல்லைப் பெரியார் அணையில் 126.84அடி நீர் இருப்பு இருக்கும் நிலையில், விவசாய சாகுபடிக்கு தற்போது தண்ணீர் திறக்கப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த முறை கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் சாகுபடி எதிர்பார்த்த அளவு இல்லை.

முதல் சாகுபடி முற்றிலுமாக இல்லாமலிருந்தது. இந்நிலையில், அணைத் தண்ணீரால் இரு போக நெல் சாகுபடி சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுப்படி முல்லைப் பெரியார் அணையின் மட்டத்தை 152அடியாக உயர்த்த கேரள அரசுடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close