Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்' - ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர் கருத்து!

Chennai: 

'உப்பு தின்றவர்கள் யாராக இருந்தாலும் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்' என்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்.

"அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக நாங்கள் சொன்னது பொய். அவரை நாங்கள் யாருமே சந்திக்கவில்லை" என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகின்றன. 

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "நடிகர் கமல், அரசியலை சினிமாபோல நினைக்கிறார். ட்விட்டரில் கருத்து கூறுவதால் மட்டுமே தமிழக முதல்வராக முடியாது. பொதுக்குழுவைக் கூட்டுவேன் என தினகரன் கூறுவது வேடிக்கையாக உள்ளது. அடிப்படை உறுப்பினராகவே இல்லாத ஒருவர் பொதுக்குழுவைக் கூட்ட முடியாது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத் தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார். ஜெயலலிதா மரணத்தில் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. 'உப்பு தின்றவர்கள் யாராக இருந்தாலும் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்.'
மேலும், அரசோடு சேர்ந்து மக்களும் பணியாற்றினால்தான் டெங்குவை ஒழிக்க முடியும்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close