Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அடுத்த இரண்டு நாள்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில், அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

தமிழகத்தில், கடந்த சில நாள்களாக நல்ல மழை பெய்துவருகிறது. குறிப்பாக, இன்றும் சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே மழை பெய்துவருகிறது. சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்வதால், இதமான சூழல் நிலவுகிறது. 

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்திய மேற்கு வங்கக் கடலில் மேலடுக்குச் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. 

மேலும், அடுத்த இரண்டு நாள்களுக்கு வட தமிழகத்தில் கன மழையும், தென் தமிழகத்தில் மிதமான மழையும் பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை விட்டுவிட்டு மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரை, ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் இன்று வரை 39 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது, வழக்கத்தைவிட 31 சதவிகிதம் அதிகம்" என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close