Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிங்கப்பூர் குத்துச்சண்டைப் போட்டியில் தமிழர் பலி!

சிங்கப்பூரில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர், காயமுற்று மரணமடைந்தார்.

குத்துச்சண்டைப் போட்டியில் தமிழர் மரணம்

மெரினா பேவில் நடந்த போட்டியில், 42 வயது ஸ்டீவன் லிம்முடன் 32 வயது பிரதீப் மோதினார். இந்தப் போட்டியில், லிம்மை எதிர்த்து சிங்கப்பூரின் பிரபல வீரர் சில்வஸ்டர் ஸிம்தான் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், இன்சூரன்ஸ் செய்யாத காரணத்தினால், போட்டி அமைப்பாளர்கள் அவரை போட்டியிட அனுமதிக்கவில்லை. 

இதையடுத்து, திடீரென பிரதீப் களம் கண்டார். இவர், உலக ஆணழகர் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவுத் தலைவராகவும் இருந்தார். களத்தில் இறங்குவதற்கு முன்னதாக, பிரதீப் சுப்ரமணியத்துக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. உடல் தகுதியுடன் இருந்ததால், போட்டியில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டார். 

போட்டி தொடங்கிய 5 நிமிடத்தில், பிரதீப் சுப்ரமணியத்தின் மூக்கிலிருந்து ரத்தம் வடியத் தொடங்கியது. இதைக் கண்ட நடுவர், போட்டியை நிறுத்தி, லிம் வெற்றி பெற்றதாக அறிவித்தார். பிரதீப், களத்தில் மயங்கி சரிய, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சையளித்தும் பலனளிக்காமல், ஒரு மணி நேரத்தில் பிரதீப் சுப்ரமணியம் இறந்துபோனார். பிரதீப்பின் மறைவுக்கு ஸ்டீவன் லிம் இரங்கல் தெரிவித்துள்ளார்,

குத்துச்சண்டை போட்டியில் வீரர் ஒருவர் இறந்துபோனது, சிங்கப்பூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close