Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடரும் நெருக்கடி: கார்த்தி சிதம்பரத்தின் வங்கிக் கணக்கு முடக்கம்!

கார்த்தி சிதம்பரத்தின் வங்கிக் கணக்கை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

கார்த்தி சிதம்பரம்

அந்நியச் செலாவணி வழக்குகளில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணைக்கு சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துவந்த நிலையில், தற்போது, அவரது வங்கிக்கணக்கை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம், சட்டவிரோதமாக அந்நிய முதலீடு செய்ய, கார்த்தி சிதம்பரம் உதவியதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, கார்த்தி சிதம்பரத்தின் ரூ.90 லட்சம் நிரந்தர கணக்கு உள்ள வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கியுள்ள கார்த்தி சிதம்பரம், வெளிநாடு தப்பிச்செல்ல வாய்ப்பிருப்பதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் விடுத்தது. அவர் உள்ளிட்ட நான்கு பேர், தேடப்படும் நபர்களாக உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தனர். இதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததில், லுக் அவுட் நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, நீக்கப்பட்டது. 

தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நடந்துவந்த வழக்கு விசாரணையில், கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ முன் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கிலும் கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close