Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு எப்போது? : புதிய தகவல்

சிவாஜி கணேசனின் மணிமண்டபம் அக்டோபர் 1-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவாஜி கணேசன் மணிமண்டபம்

 
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் விதமாக அவருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், சிவாஜி கணேசன் மணிமண்டபத்துக்கான பணிகள் சென்னை அடையாறு சத்யா ஸ்டுடியோ எதிரில் 28,124 சதுர அடி பரப்பளவில் 2016 டிசம்பர் 19-ம் தேதிதான் தொடங்கப்பட்டன. இந்தநிலையில், சிவாஜியின் 90 வது பிறந்த நாளையொட்டி மணிமண்டபம் திறக்கப்பட உள்ளது. ரூ.2.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி மற்றும் அவரது முழுஉருவச் சிலை உள்ளிட்டவை வைக்கப்பட இருக்கின்றன.

சிவாஜி மணிமண்டபத் திறப்பு விழாவுக்கு ரஜினி மற்றும் கமல் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிவாஜி சிலை, உயர் நீதிமன்றம் உத்தரவை அடுத்து அங்கிருந்து அகற்றப்பட்டு சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரியார், அண்ணா, எம்,ஜி.ஆர், காமராஜர் ஆகியோரின் சிலைகள் தனியாகவும், மணிமண்டபம் தனியாகவும்தான் இருக்கிறது. அதேபோல் சிவாஜி கணேசனின் நினைவு மண்டபத்தில் வேறு சிலையை அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close