Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

 ''ஊழல் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது..!'' பா.ஜ.க தேசியச் செயற்குழுவில் பிரதமர் மோடி ஆவேசம்

பிரதமர் நரேந்திர மோடி

''ஊழலுக்கு எதிரான தன்னுடைய போராட்டத்தில் சமரசத்துக்குக்கு இடமில்லை; யாரும் தப்பிக்க முடியாது' என்று பா.ஜ.க செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். 

பா.ஜ.க-வின் இரண்டு நாள் தேசியச் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. முதல் நாள் கூட்டத்தை கட்சியின் தலைவர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அதில், பா.ஜனதாவின் கடந்த ஓராண்டு கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், 337 எம்.பி-க்கள், 1,400 எம்.எல்.ஏ-க்கள், அனைத்து சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள், மாநிலத் தலைவர்கள், தேசியச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டார்கள். தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த தேசியச் செயற்குழு, அவரது பிறந்தநாளில்  கூட்டப்பட்டிருந்தது. இதற்கு, 'அகண்ட' தேசிய செயற்குழுக் கூட்டம் என்று பெயரிட்டிருந்தனர். 

தமிழிசை சவுந்திரராஜன் பேச்சு

இரண்டாவது நாள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடியின்  உரை குறித்து மத்திய மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களிடம் பேசினார். ''ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார். ஊழல்வாதிகள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது, எனக்கு உறவினர்கள் கிடையாது என எச்சரித்தார். பொழுதுபோக்காக அரசியல் நடத்தியதால் தான் காங்கிரஸ் கட்சி தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து இருக்கிறது. ஜனநாயகம் என்பது தேர்தல் வெற்றி, தோல்விக்கு அப்பாற்பட்டது. பா.ஜ.க அரசு மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் மட்டுமே செயல்படுகிறது. மத்திய அரசுமீதும், தன்மீதும் தரம் தாழ்ந்த சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் அரசுக்கு எந்தக் களங்கத்தையும் ஏற்படுத்தி விட முடியாது' என்று தெரிவித்தார் அருண் ஜெட்லி. மேலும் அவர் கூறுகையில், '' பிரதமர் மோடி பேசுகையில், 'மத்திய அரசின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பாகவும், வெளிநாட்டிலிருந்து 90 பயங்கரவாதிகளைத் திரும்ப இழுத்து வருவது தொடர்பாகவும் பேசினார் எனவும் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close