Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குஜராத் தேர்தல் பிரசாரம்: பிரதமர் மோடியைத் தாக்கிப்பேசிய ராகுல் காந்தி

குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடியினுடைய பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி உட்படப் பல விஷயங்களைப் பற்றி பிரதமரைத் தாக்கிப்பேசினார். 

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பா.ஜ.க செல்வாக்கு பெற்று விளங்குகிறது. இதனால், குஜராத்தில் பல ஆண்டுகளாகப் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது விஜய் ரூபானி முதல் அமைச்சராக இருக்கிறார். அடுத்து நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்த வேலைகளை ஆரம்பித்து விட்டன. இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகாவில் உள்ள துவாரகதீஷ் கோவிலுக்குச் சென்று வழிபட்டு தனது பிரசாரத்தைத் தொடங்கினார். ராகுலை வரவேற்ற கிராமத்தினர் பாரம்பர்யமான மாட்டு வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

அதன்பின்னர் ஜாம்நகர் மாவட்டத்தில் ஜாம்நகரில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசும்போது, 'குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி வருவதற்கான சூழல் இருக்கிறது. மக்கள் மாற்றத்தையே விரும்புவதால் காங்கிரஸ் நிச்சயம் ஆட்சி அமைக்கும். இங்கு ஆளும் ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இப்போதைய ஆட்சியில் அனைத்துத் துறைகளும் தனியார் மயமாகப்பட்டு வருகின்றன. அரசின் இந்தக் கொள்கையால் ஏழை எளிய மக்கள் கல்வி மற்றும் சுகாதார வசதிகளைப் பெற முடியாமல் போகிறது. இப்போது வர்த்தக முதலாளிகளுக்கு மட்டுமே ஏராளமான கடன் தரப்படுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு ஏனோ கடன் வழங்குவதில்லை. வர்த்தக முதலாளிகள் அனைத்துப் பலன்களையும் அடைந்து வருகின்றனர். பயிர்க்கடன் செலுத்தாத விவசாயிகளுக்குச் சிறை தண்டனைதான் கிடைக்கிறது. விவசாயிகள் யாரும் செல்போனிலோ அல்லது டெபிட் கார்டிலோ பணப் பரிமாற்றம் செய்வதில்லை. அவர்கள் பணம் கொடுத்துதான் விதைகளை வாங்குகின்றனர்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close