Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சசிகலாவுக்கு உடந்தையாக அப்போலோ நிர்வாகம் இருந்ததா?' முன்னாள் எம்.எல்.ஏ கேள்வி

 

ஜெயலலிதா சிகிச்சை குறித்து பல்வேறு  சர்ச்சைகளும், கருத்துகளும் நிலவி வரும் நிலையில் நாகர்கோவிலில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதியின் முன்னாள்  உறுப்பினரும், ஓ.பி.எஸ்.அணியின் ஆதரவாளருமான முத்துக்கிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை தற்போது செயல் வடிவம் பெற்றுள்ளது. அதற்கு உத்தரவிட்ட அரசுக்கு நன்றி. ஜெயலலிதா சிகிச்சை குறித்து வீடியோ எடுத்தார்கள் என்று கூறும்போது மருத்துவமனையில் வைக்கப்படிருந்த சிசிடிவி கேமராவிலும் அந்தக் காட்சிகள் பதிவாகி இருக்கும்.

எனவே அந்தக் காட்சிகளை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ  மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அங்கு நடந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் சசிகலாவிற்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டிருக்கிறார்கள் என்றே தெரிகிறது. அப்போலா மருத்துவமனை அறிக்கைகள்  மூலம்  ஜெயலலிதா உயிருடன் இருப்பதாக மக்களையும், அ.தி.மு.க தொண்டர்களையும் சசிகலா ஏமாற்றியே வந்துள்ளார். ஜெயலலிதா உயிருடன் இருப்பதாக சசிகலா நாடகமாடியுள்ளார். இது சசிகலாவின் குடும்பம் திட்டமிட்டு செய்த சதி செயல். ஜெயலலிதாவைப் பார்க்க அதிகாரிகளையும், அமைச்சர்களையும்  அனுமதிக்காமல் இருந்ததின் பின்னணியில் அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர்தான் இருந்துள்ளாரா? என்ற சந்தேகம் எழுவதாக" அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close