Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இஸ்ரோ நிறுவனம் குறித்த செய்தி!' - செய்தியாளர்கள்மீது வழக்கு!

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி மலையில் உள்ள இஸ்ரோ நிறுவன வளாகத்தின் மலையில் வெடிபொருள் வெடித்ததாகச் செய்தி வெளியிட்ட செய்தியாளர்கள் மூவர்மீது பணகுடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு

செய்தியாளர்கள் மீது வ்ழக்குநெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள மகேந்திரகிரி மலையில் இஸ்ரோ மையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் திரவ இயக்க உந்தும மையம் அமைந்துள்ளது. இந்த மையம் அமைந்துள்ள மலைப் பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் மலையின் உச்சியில் இருந்து புகை மண்டலம் எழுந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்தச் சத்தத்தை அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கேட்டதாகவும் தகவல் வந்தது.

இதையடுத்து, அந்த மையத்தின் பாதுகாப்பில் ஈடுபடும் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர், வனத்துறையினர் உள்ளிட்டோர் தீவிர சோதனை நடத்தினர். அதில் வெடி பொருள் எதுவும் வெடிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து நெல்லை மாவட்ட எஸ்.பி-யான அருண்சக்தி குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ’’நெல்லை மாவட்டம் பணகுடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் கடந்த 23-ம் தேதி மர்மப் பொருள் வெடித்து புகை எழுந்ததாக செய்திகள் வெளியாயின.

இது தொடர்பாக பணகுடி வருவாய் ஆய்வாளரின் புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நெல்லை காவல்துறையினர் எஸ்.பிமற்றும் நக்சல் தடுப்புப் பிரிவு, மத்தியத் தொழில்படை பாதுகாப்புப் பிரிவினர் ஆகியோர் வனத்துறையினருடன் மலைப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், மர்மப் பொருள் வெடித்ததாக வந்த தகவல் வதந்தி எனவும், பாதுகாப்புப் பகுதியிலிருந்து 20 கி.மீ வடக்கே உள்ள குறவி மலைப்பகுதியில் பாறைச் சரிவு ஏற்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. அதனால் வீண் வதந்தி பரப்புவோர்மீது நடவடிக்கை எடுக்குமாறு  இஸ்ரோ பாதுகாப்பு அதிகாரிகள் புகார் அளித்துள்ளார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தவறான செய்தி வெளியிட்டதாக தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர், நாளிதழ் செய்தியாளர் ஒருவர்மீது பணகுடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள்மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 469, 505, 507, ஐ.டி சட்டப்பிரிவு 67 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள செய்தியாளர்கள் காவல்துறையின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரனை சந்தித்து முறையிடவும் செய்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close