Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திறனாய்வுப் போட்டியில் மாணவர்கள் காட்சிப்படுத்திய படைப்புகள்! பாராட்டிய கலெக்டர்

தமிழக மாணவர்கள் தங்கள் திறமையை வெளிக்காட்டவும், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் தங்களின் நவீன தொழில்நுட்பம் சார்ந்த எண்ணங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க ஒரு களத்தினை தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகம் மாநில அளவிலான திறனாய்வுப் போட்டிகள் மூலம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. மாநில அளவிலான போட்டிகள் வரும் அக்டோபர் 3ம் வாரத்தில் சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதன் முதல்கட்டமாக மாவட்ட அளவிலான போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவிருக்கிறது. அதன்படி இன்று தேனி மாவட்டத்தில் திறனாய்வுப் போட்டியை மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தொடங்கிவைத்தார்.

இந்தப்போட்டியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் தங்களின் படைப்புகளை இன்று மாவட்டத் தொழிற்பயிற்சி மையத்தில் பலர்  காட்சிப்படுத்தினர். அதில், கல்லூரி மாணவ மாணவிகளும், பல தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களும் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.

அதில் பழங்களை சோலார் முறையில் பதப்படுத்தும் இயந்திரம், சென்சாரில் இயங்கும் கார்கள், ரயில் பாதுகாப்பு குறித்த நவீன கருவிகள் என 30க்கும் மேற்பட்ட கருவிகள் இடம்பெற்றிருந்தன. அதனை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு அவர்களை வாழ்த்தினார். இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாதவர்கள் தங்களது படைப்புகளைப் பற்றிய தகவல்களை www.skilltraining.tn.gov.in என்ற முகவரியில் பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close