Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாடகை பாக்கி: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சம்பளம் வழங்கத் தடை!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சம்பளம் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

திருவள்ளுர் மாவட்டம், மாதாவரம் தாலுகா அலுவலத்திற்கு, பரிதா சவுகத் என்ற 65 வயது மூதாட்டிக்குச் சொந்தமான வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டது. இதற்காக, மாதம் ரூ.1,20,000 வாடகை பேசப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன் வருவாய்த்துறை அலுவலர்கள் அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்து, அலுவலகம் அமைத்துக்கொண்டனர்.

ஒப்பந்தம் ஆகாத நிலையில், அந்தக் கட்டடத்துக்குப் பொதுப்பணித்துறை, ரூ.98,925 வாடகையாக நிர்ணயித்தது. ஆனால், நிர்ணயித்த தொகையும் வாடகையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பரிதா சவுகத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "கட்டடத்துக்கு வாடகை வழங்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கட்டடத்துக்கான வாடகை ஒப்பந்தம் மேற்கொள்ளாமல், 65 வயது மூதாட்டியை அலைக்கழித்து உள்ளனர். எனவே,
30 நாள்களில் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும். மேலும், 30 நாள்களுக்குள் மீதம் உள்ள வாடகையை வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

அதேபோல, ஒப்பந்தம் மேற்கொள்ளாமல் பரிதாவை அலைக்கழித்த, வருவாய்த்துறை செயலாளர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி மற்றும் தாலுகா தாசில்தார் ஆகியோரது ஊதியங்களை ஒப்பந்தம் மேற்கொள்ளும்வரை வழங்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close