Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சக மாணவன் குளத்தில் மூழ்குவதை அறியாமல் செல்ஃபி எடுத்த மாணவர்கள்!

Chennai: 

பெங்களூருவில் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது சக மாணவன் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பது தெரியாமல் மாணவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

மாணவர்கள் குளத்தில் குளிக்கச் சென்றிருந்தபோது 10 அடி ஆழ குளத்தில் விஸ்வாக் என்ற மாணவன் மூழ்கிக் கொண்டிருந்தான். அவனைக் கவனிக்காமல் பிற மாணவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தனர். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் விஸ்வாக்கை காணாமல் தேடிய பிறகு அவரது உடல் குளத்தில் மிதக்க ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் எடுத்த செல்ஃபி புகைப்படத்தில் விஸ்வாக் மூழ்குவது பதிவாகியிருக்கிறது.  

இச்சம்பவம் அங்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் புகைப்படமும் செய்தியும் வைரலாகி வருகிறது. செல்ஃபி எடுக்கும் குஷியில் சக மாணவனைக் கண்டுகொள்ளாமல் இருந்த அலட்சிய போக்கை நினைத்து பலரும் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close