Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’பயிர் காப்பீடு செய்யுங்கள்!’ - விவசாயிகளுக்கு கலெக்டர் வேண்டுகோள்!

    சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சித் தலைவர் லதா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் '2017-18ம் ஆண்டுக்கு நெல், சம்பா, தாளடி பருவத்துக்கு பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா பயிர் காப்பீடு திட்டத்துக்கான அரசாணை பெறப்பட்டுள்ளது. நடப்பாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 520 வருவாய் கிராமங்களில், அறிவிக்கை செய்யப்பட்ட 481 கிராமங்களுக்கு கடன் பெறும் விவசாயிகள் இத்திட்டத்தில் கண்டிப்பாக இணைக்கப்படுவர்.  மாறுபட்ட தட்பவெப்ப சூழ்நிலை நிலவுவதால் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் சேர்ந்து பயன்பெற வேண்டும்.

அறிக்கை செய்யப்பட்ட வருவாய் கிராமத்தில் காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.23,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 15க்குள் பிரிமீயத் தொகை ரூ.352.50 செலுத்த வேண்டும்.  விவசாயிகள் தங்களின் பிரீமியத் தொகையை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்களில் செலுத்தலாம். இதற்காக அக்டோபர், நவம்பர் மாதங்களில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி விவசாயிகளைப் பயிர் காப்பீடுத் திட்டத்தில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி விவசாயிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்து பயன் பெற வேண்டும்’ என்று மாவட்ட ஆட்சித் தலைவர் லதா அறிவுறுத்தியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close