Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்’ - அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி ரசிகர்கள்

நடிகர் சிவாஜி குறித்து அவதூறாகப் பேசியதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவையின் தலைவர் சந்திரசேகரன் விடுத்துள்ள அறிக்கையில், ‘நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் சிவாஜிகணேசன் தனிக்கட்சி தொடங்கி எம்.எல்.ஏ-ஆகக் கூட முடியவில்லை என்று உளறியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.

இன்று நடிகர்கள் அரசியலுக்கு வரும்போதெல்லாம், ஜெயக்குமார் போன்ற பணம் சம்பாதிக்க மட்டுமே அரசியல் செய்ய நினைக்கும் சிலர் நடிகர் திலகம் சிவாஜி கட்சி ஆரம்பித்து தோற்றார் என்று கூற ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சிவாஜி எம்.எல்.ஏ-வாக ஆகாமல் கூட, அவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனபின்னும் போற்றப்படுகிறார். இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களால் போற்றப்படுவார். ஆனால், ஜெயக்குமார் போன்ற அனாமதேய அரசியல்வாதிகள் பதவி போனபின் அடையாளம் அழிந்து, இருந்த இடம் தெரியாமல் போவார்கள் என்பதுதான் உண்மை. 

இனியாகிலும், நடிகர் திலகம் மீது இத்தகைய அவதூறு பிரசாரத்தை ஜெயக்குமார் போன்றவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் நடிகர் திலகத்தின் லட்சோபட்சம் ரசிகர்கள் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close