Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.ஜி.பி-யின் 'அலர்ட்' அறிக்கை... பின்னணி என்ன?

 

                      போலீஸ்

 போலீஸ் கமாண்டோ படையினர்  அந்தந்த  மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் 'தயார்' நிலையில் இருக்கும்படி சொல்கிற  போலீஸ் டி.ஜி.பி. அலுவலக சுற்றறிக்கை  பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது. போலீஸ் வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது, "இந்த மாதிரியான அலர்ட், வழக்கமான நடைமுறையில் இருப்பதுதான். சில இடங்களில் 144 தடை உத்தரவு உள்ளதை 15 நாள்களுக்கு ஒருமுறை நீட்டிப்பதைப் போன்றதே அது. போலீஸ் டி.ஜி.பி.  அலுவலகத்தின் வழக்கமான இந்த சுற்றறிக்கை, மாவட்ட  எஸ்.பி. அலுவலகத்துக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும் ரகசியத் தகவல் அறிக்கையாகும்.  

'அலர்ட்' டில் இருக்கும்படி 19 மாவட்டங்களுக்கு பிரத்யேகமாக அனுப்பி வைக்கப்பட்ட  இந்த அறிக்கை, வெளியில் கசிந்தது எப்படி என்பதுதான் எங்கள் தரப்பு கேள்வியாக இருக்கிறது" என்கின்றனர். தமிழக ஆளுநரின் தமிழக வருகை, பி.ஜே.பி.யின் மூத்த தலைவரான அத்வானியின் தமிழக வருகை மற்றும் 'ஜெயலலிதாவை சிகிச்சையின்போது பார்த்தோம், பார்க்கவில்லை' என்று மாற்றி, மாற்றிப் பேசுகிற தமிழக அரசியல் நிலவரம் இவற்றுக்கெல்லாம் முடிச்சுப் போட்டு  இந்தத் தகவல் பதற்றத்தை உண்டாக்கிவிட்டது.


போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன்இன்னும் சிலர், "காலையிலிருந்தே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும்  ஆட்சி குறித்து 'முக்கிய' ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர், சசிகலாவின் கணவர் நடராஜன், மிகவும் மோசமான உடல் நிலையில் இருக்கிறார், அந்த 19 மாவட்டங்களில் நக்ஸலைட்டுகள் அதிகமாகி விட்டதால்தான் இந்த எச்சரிக்கை அறிக்கை வெளியானது" என்று கொளுத்தி விடத் தொடங்கி விட்டனர்.போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரனிடம் கேட்டபோது, "இது வழக்கமான நடைமுறையில் இருக்கும் 'அலர்ட்' அவ்வளவுதான்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close