Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பகவத் கீதையை மொழிபெயர்த்தவர் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகரானார்

Chennai: 

அடுத்த ஆண்டு (2018) மார்ச் மாதத்துடன் முழுவடைய உள்ள நிதியாண்டின் எதிர்பார்ப்புகள் குறித்து மதிப்பீடு செய்ய ஐந்து பேர் கொண்ட பொருளாதார நிபுணர்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கி உள்ளார். இந்தக் குழுவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பிபெக் டெப்ராய் நியமிக்கப்பட்டுள்ளார். 

 பொருளாதார ஆலோசகர்

பொருளாதார தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள பிபெக் டெப்ராய் கொல்கத்தாவைச் சார்ந்தவர். இவர் நார்த்ராபூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷனரியில் பள்ளிப் படிப்பையும், கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் பொருளாதாரமும் படித்திருக்கிறார். முதுநிலை பட்டப்படிப்பை டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸிலும், கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியிலும் படித்திருக்கிறார். 

பிபெக் டெப்ராய் கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியிலும், புனேவில் உள்ள கோகலே இன் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் கல்லூரியிலும், டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாரின் டிரேடு கல்வி நிறுவனத்திலும் ஆசிரியர் பணி செய்திருக்கிறார். அப்ளிகேஷன் எகனாமிக்ஸ் ரிசர்ச் தேசிய கவுன்சிலும், ராஜீவ்காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் த காண்டம்பரல் ஸ்டடீஸ் நிறுவனத்திலும் ஆராய்ச்சி பணியைச் செய்திருக்கிறார். 

1993-1998-ம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தின் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து ஐ.நா. அமைப்பின் பொருளாதார ஆலோசகர் பணியில் இருந்திருக்கிறார். 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சென்டர் பஃர் பாலிசி ரிசர்ச் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். அதன்பின்பு சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரீஸ்-யில் அமைப்பின் செயலராக இருந்திருக்கிறார். 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பிலும் உறுப்பினராகி இருக்கிறார். இந்திய ரயில்வே மறுசீரமைப்பதற்கான குழுவிலும் தலைமைதாங்கி இருக்கிறார். 

பிபெக் டெப்ராய் 2015-ம் ஆண்டில் பத்மஶ்ரீ விருதையும், 2016-ம் ஆண்டில் அமெரிக்க- இந்திய வணிக உச்சி மாநாட்டில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றிருக்கும் இவர், மகாபாரத்தின் பத்து தொகுதிகளையும் மாற்றி எழுதி இருக்கிறார். ஹரிவாகாவையும், பகவத் கீதையும் மொழிபெயர்த்திருக்கிறார். தற்போது பகவத் புராணத்தின் மொழி பெயர்க்கும் பணியையும் மேற்கொண்டிருக்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close