Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”கால்நடைகளுக்கு மேய்ச்சல் புல் இல்லை”: ஆட்சியரிடம் புகாரளித்த கிராம மக்கள்!

   கோரிக்கை

பில்லூர் கிராம மக்கள் ஆடு மாடுகள் மேய்ச்சல் புல் இன்றி தவிப்பதாகக் கூறி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருக்கிறார்கள்.

புகார் கொடுக்க வந்திருந்த பில்லூர் கிராம மக்கள் கூறுகையில், “சிவகங்கை மாவட்டம் பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த நாங்கள் பூர்வீகமாக விவசாயத்தையும் ஆடு மாடுகளையும் நம்பியிருக்கக் கூடியவர்கள். மழை இன்றி விவசாயம் பொய்த்துப்போனதால் விவசாயத்துக்குப் பதிலாக ஆடு மாடுகளை வளர்க்க ஆரம்பித்தோம். அந்த வகையில் வீடு தவறாமல் ஒவ்வொரு விவசாயியும் ஆடுமாடுகள் வைத்திருக்கிறார்கள். தற்போது மழைபெய்து காடுகரைகள் எல்லாம் மேய்ச்சல் புல்கள் பச்சைப் பசேல் என விளைத்திருக்கிறது.

ஆனால், எங்கள் ஊரைச் சேர்ந்த முத்துச்சாமி தன் மகளைத் தாலிக்குளத்தைச் சேர்ந்தவருக்கு கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார். அவர் தன்னுடைய ஊரில் இருந்து 200 மாடுகளை எங்கள் ஊரில் கொண்டு வந்து மேய்த்துவருகிறார். இதனால் இதே ஊரில் வாழ்ந்து வரும் நாங்கள் வைத்திருக்கும் ஆடு மாடுகளுக்கு மேய்ச்சல் புல் இன்றி தவித்து வருகிறோம். ஊரு விட்டு ஊரு வந்து எங்கள் வாழ்வாதாரத்தைக் கெடுத்துவருகிறார். இதுகுறித்து நாங்கள் போலீஸில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் மாடுகள் வைத்து பால் கறந்து அதை பால் கூட்டுறவு சங்கத்தில் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறோம். முத்துசாமியின் மருகனால் எங்கள் ஊர்மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஆகையால் எங்கள் ஊரில் பூர்வீக விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறோம். இதனால் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து புகார் அளிக்க வந்துள்ளோம்” என்றனர்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close