Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாநிதியுடன் அன்பழகன், ஸ்டாலின் சந்திப்பு! - புதிய புகைப்படம் வெளியீடு

சென்னையில், தி.மு.க தலைவர் கருணாநிதியை பேராசிரியர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். 


கருணாநிதியின் உடல்நிலைகுறித்து பல்வேறு தகவல்களும் ஊகங்களும் சமூக வலைதளங்களில் பரவிவந்தன. இதுகுறித்துப் பேசியிருந்த தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ``கருணாநிதி நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் உடல்நிலை குறித்து வெளிவரும் தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்'’ என்றார். மேலும், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், `தி.மு.க தலைவர் கருணாநிதி, கோபாலபுரம் இல்லத்தில் நலமுடன் உள்ளார். வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில், தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன், கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அதேபோல, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், கனிமொழி, ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி நலமுடன் இருக்கிறார். வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். வதந்தி பரப்பியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close