Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

62 கிராம மக்கள் சேர்ந்து கொண்டாடும் கோயில் திருவிழா!

ஏழைகாத்தம்மன்

மதுரை மேலூரை அடுத்த 'வெள்ளலூர் நாடு' என்று அழைக்கப்படும் கோட்டநத்தாம்பட்டி, நயத்தான்பட்டி,  உறங்காம்பட்டி உள்ளிட்ட 62 கிராமங்கள் சேர்ந்து கும்பிடும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா, நேற்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், உடல் நிலை சரியாக வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்றும் இளைஞர்கள் தங்களின் உடலில் வைக்கோல்பிரியைச் சுற்றிக்கொண்டு கரும்புள்ளி, செம்புள்ளி உள்ளிட்ட வேடங்கள் அணிந்துகொண்டு, சுமார் 16 கிலோமீட்டர் நடந்தே கோயிலுக்குச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது .

மேலும், தேர்வுசெய்யப்பட்ட ஏழு குழந்தைகளை, நகை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றும், பெண்கள் மதுக்களையங்களைத் தூக்கிக்கொண்டும் ஊர்வலமாகச் சென்றனர். மேலும், அம்மை நோய் தீர சிலைகள் எடுத்தும் நேத்திக்கடன் தீர்த்தனர். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நூதன திருவிழாவை, பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் வந்து கண்டுகளித்தனர். மேலும், 62 கிராமங்கள் வாரியாக கிராம அம்பலகாரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது. உறங்காம்பட்டி முதல் அம்மன்கோயில்பட்டி வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close