Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரப்பர் தொழிலாளர்கள் சம்பளப் பிரச்னை..! போராட்டம் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், தரமான ரப்பர் அதிக அளவு உற்பத்தியாகிறது. ஆனால், இதுவரை கனரக ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படவில்லை. வேறு தொழில் வாய்ப்பு இல்லாத குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை அமைந்தால், அதிகமானவர்கள் வேலை வாய்ப்பையும், விவசாயிகளுக்கு நல்ல பலனையும் கிடைக்கச் செய்வதோடு, மாவட்டமும் வளர்ச்சிபெறும். குமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம், தோவாளை ஆகிய  மூன்று  தாலுகாக்களில், அதிகளவில் ரப்பர் சாகுபடி தொடங்கி 115 ஆண்டுகள் கடந்துள்ளது.  

குமரி மாவட்டத்தில், அரசு ரப்பர் கழகத்தின் கீழ் கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, மயிலார், சிற்றார், குற்றியாறு, மருதம்பாறை, கல்லாறு ஆகிய இடங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 870 ஹெக்டேர் பரப்பளவில் அரசு ரப்பர் தோட்டம் உள்ளது. இந்தப் பகுதிகளில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பால் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

ரப்பர் கழகத்தில்  மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளப் பேச்சு வார்த்தை நடத்தப்படும். கடைசியாக, கடந்த 2014-ம் ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தி சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மீண்டும் 2017-ம் ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். இதற்கான பேச்சுவார்த்தை, நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் 17 முறை நடந்தது. ஆனால் ரப்பர் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. 18-வது முறையாக குமரி மாவட்டத் தொழிலாளர்கள் யூனியன் அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு தொழிலாளர் துறை துணை ஆணையர் ஹேமலதா தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதுகுறித்து ஐ.என்.டி.யூ.சி மாவட்டத் தலைவர் அனந்த கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, 'வரும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்னர், தமிழக அரசு வனத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரை ஒன்றிணைத்து, மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close