Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''தங்கம் விலை திடீர் உயர்வு ஏன்..?''


தங்கம்

தங்கத்தின் விலை, நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.320 கூடியது. இனி, தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறுமுகத்தில்தான் இருக்கும் என்று நகை வியாபாரிகள் கூறுகிறார்கள். 
ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த  இரண்டு மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டுவருகிறது. கடந்த 10-ம் தேதி, ஒரு பவுன் தங்கம் விலை ரூ.23 ஆயிரத்தைத் தொட்டது. ஒரு கிராம் விலை ரூ.2,895 ஆக இருந்தது. ஒரு பவுன் விலை ரூ.23,160 என்று விற்பனை ஆனது. அதன் பின்னர், தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில், நேற்று காலை 23 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. இது, முந்தைய நாள் விலையைக் காட்டிலும் பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்தது. கிலோவுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.43,100 என்று விற்பனையானது.
இதுகுறித்து தங்க நகை வியாபாரிகளிடம் விசாரித்தபோது, ''பண்டிகைக் காலம் இப்போது தொடங்கியிருக்கிறது. ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என வரிசையாக பண்டிகைகள் வருகின்றன. இந்த நேரத்தில் தங்கத்தின் மீதான முதலீடு இயற்கையாகவே அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், தங்கம் வாங்குவோரின் எண்ணிக்கையும் இந்த சீசனில் அதிகரிக்கும். எனவே, தங்கம் விலை இனி ஏறுமுகமாகத்தான் இருக்கும். மேலும், உலகச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சி அடைந்துள்ளதும் தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம். மேலும், வடகொரியா-அமெரிக்கா மோதலும் தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகும்'' என்றார்கள். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close