Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அதைப்பற்றி பேச வேண்டாம்'- செய்தியாளர்களிடம் கலகலத்த திண்டுக்கல் சீனிவாசன்

எம்ஜிஆர்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பூஜையில் பங்கேற்க வந்த திண்டுக்கல் சீனிவாசனிடம் அ.தி.மு.க கட்சி பிரச்னைபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘’அதைப்பற்றி பேச வேண்டாம், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைப் பற்றி சொல்கிறோம்’’ என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் வரும் 23 -ம் தேதி நடத்த முடிவுசெய்யப்பட்டு, சிவகாசி அருகிலுள்ள செங்கமலநாச்சியார்புரத்தில் உள்ள அண்ணாமலையார் நகரில் இடம் தேர்வுசெய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் வெங்கடாச்சலம் செய்திருந்தார்.

காலையில் நடந்த பூஜையில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ஜனார்த்தனம், ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன், ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர். தற்போது மீடியாக்களால் விரும்பப்படும் நபராக மாறிவிட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், அ.தி.மு.க கட்சி பிரச்னைபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘’அதைப்பற்றி பேச வேண்டாம், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைப் பற்றி சொல்கிறோம்’’ என்று கூறிவிட்டுச் சென்றார்கள்.

மாவட்டத் தலைநகரான விருதுநகரில் இவ்விழாவை நடத்த வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக இருந்தது.  எம்.ஜி.ஆருக்கு பிடித்தமான அருப்புக்கோட்டையில் நடத்துவது பொருத்தமாக இருக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், தன்னுடைய தொகுதியான சிவகாசியில் நடத்த உத்தரவிட்டார், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. கடந்த மாதம் ஓ.பி.எஸ். அணியினர் சிவகாசியில்தான் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைப் பெரும் கூட்டத்தைத் திரட்டி நடத்தியிருந்தார்கள். தற்போது, எல்லோரும் ஒன்றாகிவிட்டாலும், அதைவிட பிரமாண்டமாக இந்த விழாவை நடத்த முடிவுசெய்துள்ளார், ராஜெந்திர பாலாஜி. இந்தப் பூஜையில், விருதுநகர் எஸ்.பி ராஜராஜன், ஷூவைக் கழற்றாமல் கலந்துகொண்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close