Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கைக்குக் கடத்த முயன்ற 260 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

இலங்கைக்குக் கடத்தவிருந்த, அரசால் தடை செய்யப்பட்ட 260  கிலோ கடல் அட்டைகளை, போலீஸார் பறிமுதல்செய்தனர்.

 இலங்கைக்கு கடத்த இருந்த கடல் அட்டை

அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை, சட்ட விரோதமாகப் பிடித்துவந்து, அவற்றை வெளிநாடுகளுக்குக் கள்ளத்தனமாகக் கடத்துவது, ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியை அடுத்துள்ள வட்டான்வலசை பகுதியிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உச்சிப்புளி போலீஸார் அந்தப் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் சோதனையிட்டனர். அங்கு, 260 கிலோ கடல் அட்டைகள் பதப்படுத்த இருந்த நிலையில், அவற்றைக் கைப்பற்றினர்.

மேலும், கடல் அட்டைகளைக் கடத்தப் பயன்படுத்திய ஒரு வேன், மூன்று இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் போலீஸார் கைப்பற்றினர். இதுதொடர்பாக, வாணியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரைக் கைதுசெய்த போலீஸார், தப்பி ஓடிய சபரிராஜன், விஜயஆனந்த், அடைக்கலம் ஆகிய  மூன்று பேரைத் தேடிவருகின்றனர். கைப்பற்றப்பட்ட அட்டை மற்றும் வாகனங்கள், மண்டபம் வன உயிரினப் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close