Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செந்தில் பாலாஜியை அக்டோபர் 3 வரை கைதுசெய்யத் தடை!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அக்டோபர் 3-ம் தேதி வரை கைதுசெய்ய, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை, ஜெயலலிதா அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர், செந்தில் பாலாஜி. இவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா ஆதரவாளராகச் செயல்பட்டுவருகிறார். இதனிடையே, முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெறுவதாக செந்தில் பாலாஜி ஆளுநரிடம் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, அவரது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது.

 அமைச்சராக இருந்தபோது, செந்தில் பாலாஜி 16 பேரிடம் தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி, 95 லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு, வேலை வாங்கித் தராமல் மோசடிசெய்துள்ளதாக, சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட  மூன்று பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

இந்த வழக்கில் கைதுசெய்யப்படலாம் எனக் கருதிய செந்தில் பாலாஜி, முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், "என் உறவினர் என்று கூறப்பட்ட பிரபு என்பவரிடம் பணத்தை வசூலித்துக் கொடுத்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த நபர், தன் உறவினர் அல்ல. புகார்தாரரான கணேஷ் குமாரை நான் சந்தித்ததே இல்லை. மேலும், போக்குவரத்துத்துறையின் அனைத்து நியமனங்களும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள்மூலமே நடத்தப்படுகிறது. இந்த வழக்கில், என்னை காவல்துறையினர் கைது செய்ய முயன்றுவருவதால், முன்ஜாமீன் வழங்க வேண்டும். மேலும், 23 மாதங்களுக்குப் பிறகே இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பொய்யான புகார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியை அக்டோபர் 3-ம் தேதி வரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்த உயர் நீதிமன்றம், அரசு தலைமை வழக்கறிஞர் அன்றைய தினம் ஆஜராக உள்ளதால், வழக்கை ஒத்திவைத்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close