Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்.எல்.சி கோரிக்கையை ஏற்காவிட்டால் வேலைநிறுத்தம் - ஏ.ஐ.டி.யு.சி அறிவிப்பு

ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் உள்ள மத்திய தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் முன்பு நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்.எல்.சி

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் 12 ஆயித்துக்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ஜனவரி 19-ம் தேதி முதல் அமல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், என்.எல்.சி நிர்வாகம் அமல்படுத்தவில்லை. அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரியில் உள்ள மத்திய தொழிலாளர் உதவி ஆணையர் கணேசனை சந்தித்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் மனு அளித்திருந்தனர். ஆனால், அதன்மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

என்.எல்.சி

இந்நிலையில், மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி, பஞ்சப்படி ஆகியவைகளை நிலுவைத் தொகையுடன் முன் தேதியிட்டு வழங்க வேண்டும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 80 சதவிகித ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், தீபாவளி போனஸ் 8.33 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தி தீபாவளிப் பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் புதுச்சேரியில் உள்ள மத்திய  தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

கோரிக்கைகளை நிறைவேற்ற என்.எல்.சி நிர்வாகம் முன்வராவிட்டால் அடுத்த மாதம் 3-ம் தேதி வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்து, அதன்பிறகு தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்தில் நிரந்தரத் தொழிலாளர்களும் கலந்துகொள்வார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close