Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

50 கிளைகளில் ஆதார் சேவையைத் தொடங்கியது மெர்க்கன்டைல் வங்கி

TMB CEO Ramamoorthy speech

வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 50 கிளைகளில் ஆதார்சேவை மையத்தைத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி.

தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் ஆதார்சேவை மையத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘மத்திய அரசு உத்தரவின்படி தங்கள் வங்கிகளில் 10 சதவிகிதக் கிளைகளை ஆதார் சேவை மையமாகச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி,  இந்தியா முழுவதும் 50 வங்கிக் கிளைகளில் இன்றுமுதல் ஆதார் சேவைமையம் தொடங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 31-ம் தேதி வாடிக்கையாளர்கள் அனைவருமே தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனாலும், இன்னும் பல வாடிக்கையாளர்களிடம் ஆதார் இல்லை. எனவே, வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் டி.எம்.பி வங்கியிலேயே ஆதார் எடுக்கும் சேவையை 50 இடங்களிலுள்ள டி.எம்.பி கிளைகளில் இன்று முதல் செயல்படும் ஆதார் மையங்களில் ஆதார் எடுத்துக்கொள்ளலாம். இச்சேவை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். 

Adhar seva started by TMB CEO ramamoorthy

ஆதார்கார்டை ரேசன் கார்டுபோல அத்தியாவசிமானது என அனைவரும் நினைக்க வேண்டும். வெளிநாட்டில் குழந்தை பிறந்ததும் பாஸ்போர்ட் கட்டாயம் எடுக்க வேண்டும். இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் சட்டதிட்டங்களை அந்த நாட்டு மக்கள் பின்பற்றுகிறார்கள். நாம் இந்திய குடிமகன் என அடையாளப்படுத்திக்கொள்ள ஆதார் மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, கோவை, சேலம், திருச்சி, பெரம்பலூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தர்மபுரி, வேலூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் 48 கிளைகளிலும், ஹைதராபாத் ஆகிய மாநிலத்தில் தலா ஒரு கிளை என மொத்தம் 50 டி.எம்.பி வங்கி கிளைகளிலுள்ள மையங்களில் ஆதார் சேவையைத் தொடங்கியுள்ளோம்.

ஆதார் புதிதாக எடுத்தல் முற்றிலும் இலவசம். திருத்தம், சேர்த்தல் ஆகியவற்றுக்கு மட்டும் அரசு மையத்தில் வசூலிக்கப்படும் கட்டணம் பெறப்படும். பொதுமக்களிடம் இதற்குள்ள வரவேற்பு மற்றும் பயன்பாட்டைப் பொருத்து இன்னும் கூடுதலாகத் தேவைப்படும் கிளைகளில் ஆதார் மையத்தைச் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். இன்று முதல் வங்கி வேலை நாள்களில் அலுவலக நேரத்தில் மக்கள் ஆதார் சேவை மையத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அனைத்து மக்கள் கையிலும் ஆதார் அட்டை கிடைக்கும் வரை இச் சேவை தொடர்ந்து நடைபெறும்’’ என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close