Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜெனிபாவுக்கு ஜோதிமுருகனின் தொந்தரவுகள் சொல்லி மாளாது!’ - கலங்கும் பேராசிரியர்கள்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜெனிபாவை, ஜோதி முருகன் என்பவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கத்திக்குத்து சம்பவத்தால் படுகாயமடைந்த பேராசிரியை ஜெனிபா, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

பல்கலைக்கழக இதழியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பேசினோம். " பேராசிரியை ஜெனிபாவைக் கத்தியால் குத்திய ஜோதிமுருகன் எங்களது துறையில் கௌரவ விரிவுரையாளராகக் கடந்தாண்டு மார்ச் மாதம் பணியமர்த்தப்பட்டார். ஆனால், அவர் பயிற்றுவிக்கும் முறை மற்றும் நடவடிக்கைகள்குறித்து மாணவர்களிடம் இருந்து புகார் வந்துகொண்டே இருந்தது. அதிலும், மாணவர்களுக்கு அவர் வகுப்பெடுக்கும்விதம் திருப்திகரமாக இல்லை என்று எழுத்துபூர்வமாகவே துறைத் தலைவரிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, துறையின் கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டு ஜோதிமுருகனை பணியில் இருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டு, கடந்த நவம்பர் மாதமே பணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். 

அவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால் அந்தக் கல்வியாண்டு முழுமை பெறுவதற்கு முன்னரே அவர் விடுவிக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுவதாகக் கூறி அவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு வேலை இல்லை என்பது தெரியவந்த பிறகு அவரது மனைவி விவாகரத்து கேட்டதுடன், அவர் மீது குலமங்கலம் போலீஸிலும் புகார் கொடுத்திருக்கிறார். இதனால், தனக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி பேராசிரியை ஜெனிபாவை தொடர்ச்சியாகச் சந்தித்து வற்புறுத்தி வந்தார். ஒருமுறை காரில் சென்றுகொண்டிருந்த ஜெனிபாவை, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறைக்கு அருகில் இடைமறித்து, 'தனக்கு வேலை வழங்க வேண்டும்' என்று ஜோதிமுருகன் வற்புறுத்திய நிகழ்வும் நடந்தது. 

சம்பவம் நடப்பதற்கு முதல் நாளான திங்கள்கிழமை மாலையிலும் பேராசிரியை ஜெனிபாவைச் சந்தித்து அவர் பேசியுள்ளார். ஆனால், 'வேலை தொடர்பாக இனிமேல் தன்னைச் சந்திக்க வர வேண்டாம்' எனக் கண்டிப்புடன் கூறி அனுப்பிவிட்டார். இந்தநிலையில்தான் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் துறைத் தலைவர் அறைக்கு வந்த அவர், ஜெனிபாவைக் கத்தியால் குத்தினார். மாணவர்கள் அதிகம் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர் இவ்வாறு செய்துவிட்டார். அவருக்கு உரிய தண்டனை பெற்றுத் தர போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர் குமுறலோடு. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close