Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சியில் உலக சுற்றுலா தினவிழா கோலாகலம்

உலக சுற்றுலா தினவிழா திருச்சியில் கொண்டாடப்படுகிறது. உலக சுற்றுலா தினவிழாவை முன்னிட்டு, திருச்சியில் சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பழனிகுமார், திருச்சி மாவட்ட ஆட்சியர் இராசாமணி, சுற்றுலாத்துறை துணை இயக்குநர் இளங்கோவன், கலைப்பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் குணசேகரன் ஆகியோர் கலந்துகொள்ள, நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், பேரணியை  சுற்றுலாத்துறை அமைச்சர்  வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இன்றும், நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இன்று காலை சுற்றுலா அலுவலகம், சுற்றுலா தகவல் மையம், விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பர்ய வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித ஜாண் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து, உலக சுற்றுலா தினவிழா விழிப்பு உணர்வு பேரணி தொடங்கியது, பாராம்பர்ய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், தப்பாட்டம், கட்டக்கால் ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தியபடி, பெமினா ஹோட்டல், ஒத்தக்கடை, எல்.ஐ.சி. அலுவலகம், ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம் வழியாக  திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில் பேரணி நிறைவடைந்தது. இப்பேரணியின் மூலம் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இன்று மாலை கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி விழா அரங்கத்தில், சுற்றுலா தின தொடக்க விழா மற்றும் நாட்டிய நாடகம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், காளியாட்டம், கருப்பசாமி ஆட்டம் உள்ளிட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close