Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைகோவை தாக்க நடந்த முயற்சியைக் கண்டித்து ம.தி.மு.க ஆர்ப்பாட்டம்

ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுள்ள ம.தி.மு.க பொது செயலாளர் வைகோவை சிங்களர்கள் தாக்க முற்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரம் ம.தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுள்ள வைகோ இலங்கையில் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும், மனித உரிமைகள் மீறல் குறித்தும் கடுமையாகக் குற்றம் சாட்டிப் பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த சிங்களர்கள் சிலர் வைகோவைச் சூழ்ந்துகொண்டு தாக்க முற்பட்டனர். இதையடுத்து வைகோவுக்குத் தனி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

வைகோ வை தாக்க முயன்றதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


வைகோவை தாக்க முயன்ற சிங்களர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு இந்திய அரசு தனது கண்டனத்தைத் தெரிவிக்கக் கோரியும் ம.தி.மு.க-வினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் குணா தலைமை தாங்கினார். நகர் செயலாளர் வைண்டிங் சுப்பிரமணியம், நிர்வாகிகள் சாதிக் அலி, பழ.சரவணன், சே.சின்னதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் பொடா அழகு சுந்தரம் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நிர்வாகிகள் பாஸ்கரன், அய்யாதுரை, ஜான்சன், லூக்காஸ், சுகநாதன், தியாகராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close