Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தூத்துக்குடியில் முதல் புத்தகத் திருவிழா : ஆட்சியர் அழைப்பு

book fair

தூத்துக்குடியில் முதல்முறையாக 10 நாள்கள் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் மாணவர்கள்,  பொதுமக்கள், கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

thoothukudi collector vengadeshஇதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் வெங்கடேஷ், ‘’தூத்துக்குடியில் முதல் முறையாக புத்தகத் திருவிழா வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 10 நாள்கள் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு புகழ்பெற்ற பதிப்பகங்களின் சார்பில் 100 புத்தக விற்பனை ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கலையரங்கில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பேச்சாளர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் ஆகியவையும் நடைபெற உள்ளது.

முதல் நாள் நிகழ்ச்சியில் ’மொழியும் வரலாறும்’ என்ற தலைப்பில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன், ’எப்போதும் சந்தோசம்’ என்ற தலைப்பில் ’சொல்வேந்தர்’ சுகி.சிவம் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களில் திருப்பூர் கிருஷ்ணன், நாறும்பூநாதன், பொன்னீலன், பர்வின் சுல்தானா, தா.கு.சுப்பிரமணியன், பாரதி பாஸ்கர், இளங்கோ, ச.தமிழ்செல்வன், ஸ்டாலின் குணசேகரன், ஜோ.டி.குருஸ், தோப்பில் முகமது மீரான், கண்மணி குணசேகரன், பாமயன் பாரதிகிருஷ்ண குமார், நாஞ்சில் நாடன் ஆகிய எழுத்தாளர்கள், பல தலைப்புகளில் கருத்துரை வழங்க உள்ளனர். வரும் அக்டோபர் 7-ம் தேதி சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான சிறப்பு பயிலரங்கமும், அக்டோபர் 9-ம் தேதி மாலை 7 மணிக்கு பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில், 'இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்கு பெரிதும் காரணம் படைப்பாளிகளா? படிப்பாளிகளா?' என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றமும் நடக்க உள்ளது.

புத்தகத்திருவிழாவில் கலந்துகொள்ள அனைவருக்குமே அனுமதி இலவசம். எனவே,  நமது மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெற உள்ள புத்தகத்திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்’’ என கூறினார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close