Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’பொய்யான அறிவிப்பை வெளியிடுவதா?’ - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

நூறு சதவிகிதம் வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டத்தில் 61 கிராமங்கள் முழுமையான நெல் விளைச்சலை எட்டியிருப்பதாக அறிவித்ததைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தை நெல் மற்றும் கரும்பு விவசாயிகள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


போராட்டம் குறித்து பேசிய விவசாயிகள், ‘சிவகங்கை மாவட்டம் நூறு சதவிகிதம் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. நாங்கள் பயிர்க்காப்பீடாக ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் லம்பார்டு காப்பீடுத் திட்டத்தில் ப்ரீமியம் செலுத்தியிருந்தோம். இந்த மாவட்டத்துக்குப் பயிர்க்காப்பீடாக 365 கோடி ரூபாய் வந்திருந்தது. ஆனால், இன்னும் பெரும்பாலான விவசாயிகளுக்குப் பயிர்க்காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. கரும்பு விவசாயிகள் காப்பீட்டுக்கான பிரீமியம் செலுத்தியும், இதுவரை காப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. கடந்த ஆறு மாதமாக கரும்புக்கான பணம் பட்டுவாடா செய்யப்படாமல் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், 61 கிராமங்கள் நூறு சதவிகிதம் நெல் விளைச்சல் கண்ட கிராமங்களாகத் தவறுதலாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருப்பதைக் கண்டித்துப் போராட்டம் நடைபெற்றது என்றனர். போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைதுசெய்யப்பட்டு, பின்னர் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close