Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: மூன்று மாதத்தில் முடிக்க தமிழக அரசு உத்தரவு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை மூன்று மாதத்துக்குள் முடிக்க விசாரணை ஆணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாள்கள் சிகிச்சைக்குப் பின்னர் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அதுதொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு கடந்த 25-ம் தேதி உத்தரவிட்டது. 

இந்த உத்தரவு தொடர்பான அரசாணையை தற்போது வெளியிட்டுள்ள தமிழக அரசு, 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதி வரை நடந்த அனைத்தையும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரணை தொடர்பான அறிக்கையை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தாக்கல் செய்யவும் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close