Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிவாஜி மணிமண்டபத்தை திறந்துவைக்கவுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ..!

 

சிவாஜி கணேசன் மணி மண்டபம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1-ம் தேதி திறந்து வைக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக தமிழக அரசு அறிவித்து விட்டது. அந்த மணி மண்டபத்தை திறந்து வைப்பது யார் என்பதையும் அறிவித்துவிட்டார்கள். 

தமிழக சட்டமன்ற பேரவைக் கூட்டத்தில் 26.08.2015 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், ''நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவைப் போற்றும் வகையில், மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசின் சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும்'' என்று அறிவித்தார். அதன்படி, அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி அருகில் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இப்போது மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு திறக்க தயார் நிலையில் உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், ''நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்டப்பட்டு, பணி நிறைவடைந்ததையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.2.80 கோடி செலவில் கட்டப்பட்ட மணிமண்டபத்தை அன்னாரது பிறந்த நாளான 01.10.2017 அன்று தமிழக அரசின் சார்பில் திறப்பு விழா நடத்திட உத்தரவிட்டுள்ளார். இம்மணிமண்டபம் திறப்பு விழா 01.10.2017 காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள். இத்திறப்பு விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் குடும்பத்தினர், திரையுலக பிரமுகர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close