Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரு மாநில முதல்வர்களின் சந்திப்பு கண்டிக்கத்தக்கது..! பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் முல்லைப்பெரியார், மஞ்சளாறு, வைகை ஆறு பாசன விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்துகொண்டார். அப்போது, முல்லைப்பெரியார் அணையின் முழுக் கொள்ளளவை 152 அடியாக உயர்த்த அரசிற்கு எவ்வாறு அழுத்தம் கொடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், "முல்லைப்பெரியார் அணையின் முழுக் கொள்ளளவான 152 அடியை உயர்த்திக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து முல்லைப்பெரியார் அணை குறித்து பேசியிருக்கிறார்கள். இது பேச வேண்டிய விஷயம் இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனே நிறைவேற்ற வேண்டும். அவர்களின் சந்திப்பை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். பேபி அணையை பலப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை உடனே உயர்த்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உடனே தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றார். இக்கூட்டத்தில் முல்லைப் பெரியார் அணை விவசாயிகள் சங்கத்தலைவர் அப்பாஸ் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close